"மருத்துவ தாவரங்கள் (மூலிகை தாவரங்கள்)" கட்டுரை பற்றிய எனது கருத்துக்கள்.
செல்வி ஐீவா (1415467) அவா்களின் மருத்துவ தாவரங்கள் கட்டுரை பற்றிய எனது கருத்துக்களை இங்கே பதிவிட்டுள்ளேன். இக்கட்டுரை கீழ்கண்ட சிறப்பம்சங்கள் உள்ளடக்கியது. மேலும் இக்கட்டுரை நமது பாரம்பாிய மரபு சாா்ந்த வாழ்வியல் முறையை அனைவருக்கும் பாிந்துரைக்கிறது என்று சொன்னால் மிகையல்ல.
  • மனித வரலாற்றின் ஒரு அங்கம் மருத்துவ தாவரங்கள்
  • மனிதனால் பயன்படுத்தபடும் அன்றாட பொருள்களில் மருத்துவ கலவை ஒன்றிணைந்துள்ளது
  • மூலிகை மருந்துகள் அவற்றின் வேலைகளின் அடிப்படையில் வழக்கமான மருந்துகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றன
  • இத்னொபொட்டானி -(தாவரங்கள் பாரம்பரிய மனித பயன்கள் பற்றிய ஆய்வு) எதிர்கால மருந்துகள் கண்டறிய ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது
  • உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி(WHO) சில ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் மக்கள் தொகையில் 80 சதவிகிதம் மக்கள் இப்பொழுது ஆரம்ப சுகாதார அம்ச மூலிகை மருந்து பயன்படுத்தப்படுகின்றது என மதிப்பிட்டுள்ளது. ஆனால் மூலிகை மருத்துவம் திறன் பற்றி அறிவியல் சான்றுகள் இன்னும் பரவலாக கிடைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஆய்வுகள் அவற்றின் பயன்பாடு, மருத்துவ அமைவுகளில் குறைவாகவே உள்ளது என்று காட்டுகின்றன.
  • நோய்க்கிருமிகள் ஆய்வுகள் மிக வெப்பமண்டல காலநிலைகளில் சமையல் மிக உயர்ந்த மசாலா என்று காட்ட மேலும், மிக வலிமையான ஆண்டிமைக்ரோபயல் செயல்பாடுகள் கொண்ட மசாலா தேர்வு செய்ய வேண்டும்.
இக்கட்டுரையை மேலும் சிறப்பாக்க சில குறிப்புக்கள்:
  • இக்கட்டுரையில் இது வரையில் மூன்று பதிப்புக்களையும், இரண்டு வண்ண படங்களையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனுடன் இன்னும் சில பதிப்புக்களை உள்ளடக்கியதாக இருப்பின் இக்கட்டுரை இன்னும் சிறப்பு பெரும்.
  • இக்கட்டுரையின் தலைப்பை மருத்துவ தாவரங்கள் என்பதற்கு பதிலாக "நவீன மருத்துவத்தில் இயற்கை தாவரங்களின் பங்கு" என்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.